Most Popular Articles

 • Patient 31 நீங்கள் அறியாத அதிர்ச்சி: இந்த சீனப் பெண் கொரோனாவை எப்படி பரப்பினார்

  Patient 31, அதாவது நோயாளி 31 என்றால் தற்போது உலகமே அலறுகிறது. சீனாவை பெரும் சந்தேக கண்ணோடு பார்கிறது. காரணம் என்னவென்றால். பல உலக நாடுகளில், கொரோனா பரவியுள்ள நிலையில். தென்கொரியாவில் அதன் தாக்கம் மிக மிக குறைவாக இருந்தது. இதனை பலர் வியந்து பார்த்ததும் உண்டு. ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து ஒரு பெண், தென்கொரியாவுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அவர் பயணித்த கார், எதேட்சையாக  சிறிய விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. இதனால் அவரை பொலிசார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.

  அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மிக மெல்லிய காய்ச்சல்(ஜுரம்) இருப்பதை கண்டு பிடித்தார்கள். ஆனால் நான் ஓகே. எனக்கு ஒன்றுமே இல்லை என்று அடம் பிடித்த குறித்த பெண், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி. சுமார் 1 வாரம் எங்கோ தங்கி விட்டு. ஒரு வாரம் கழித்து அங்குள்ள சர்ச் ஒன்றுக்கு சென்றுள்ளார். பின்னர் 1 வாரம் கழித்து மற்றுமொரு சர்ச்சுக்கு சென்றுள்ளார். அது போக புஃவே என்று அழைக்கப்படும், பலர் விருந்து உண்ணும் உணவகம் சென்றுள்ளார். இவ்வாறு திட்டமிட்டு எல்லா இடங்களுக்கும் சென்று கொரோனாவை பரப்பி உள்ளார்.

  இவரால் சர்சில் மட்டும் 1,200 பேருக்கு கொரோனா பரப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்ததில் தென்கொரிய நாட்டில் கொரோனா தொற்றிய நபர்களில், 60% சதவிகிதமான நபர்களுக்கு இவரே கொரோனாவை கொடுத்துள்ளார் என்ற அதிர்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இவரை நோயாளி 31 என்று அழைக்கிறார்கள். இவ்வாறு திட்டமிட்டு இந்தப் பெண் ஏன் தென்கொரியா சென்று கொரோனாவை பரப்ப வேண்டும் ? இவர் பின்னால் சீன அரசு உள்ளதா ? என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அது போக சீனா வுகான் மாநிலத்தில் தாம் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம் என்று கூறுகிறது. மேலும் சீன அதிபர் கைகளில் கிளவுஸ் கூட இல்லாமல் மற்றும் மூக்கு கவசம் கூட இன்றி வுகான் மாநிலம் சென்று பார்வையிடுகிறார்.

  எப்படி சீன அரசியல்வாதிகள் எவருக்கும் கொரோனா தாக்கம் இல்லை. ஆனால் சீனாவின் எதிரி நாடுகள் அனைத்திலும் கொரோனா உள்ளது. குறிப்பாக அமெரிக்க, பிரித்தானியா , பிரான்ஸ் , ஜேர்மனி, இத்தாலி. இன் நாடுகள் உலக வல்லரசாக திகழ்வதோடு. சீனாவின் எதிரி நாடகவும். இருக்கிறது. ஏன் இந்த நாடுகளில் மட்டும் கொரோனா பரவேண்டும் ?

  அது போக பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் க்கு கொரோனா தொற்றியது, மொறோக்கோ நாட்டு மன்னரிடம் இருந்து. மொறோக்கோ என்பது மொத்தமாக 35,000 பேரை மட்டுமே கொண்ட மிக சிறிய நாடு. அன் நாட்டில் உள்ள மன்னரை எவரும் இலகுவாக  சந்திக்க முடியும். ஆனால் இளவரசர் சாள்ஸை அப்படி எழிதில் எவராலும் சந்திக்க முடியாது. இதன் காரணத்தால் மொரோக்கோ மன்னர் சாள்ஸை சந்திக்க இருப்பதை அறிந்த சிலர், மொறோக்கோ மன்னருக்கு கொரோனாவை கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுகிறது.

  சற்று நோக்கினால், இது ஒரு நேரான சீரான பாதையில் பயணிப்பதை அறியலாம். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கு இன் நோய் பரவவில்லை. சீனாவுக்கு போட்டியாக உள்ள நாடுகளில் தான் இது பரவியுள்ளது.  நிச்சயம் நாம் சிந்திக்கவேண்டிய தருணம். அனைவருக்கும் பகிருங்கள் மக்களே. அனைவருமே ஒரு நபரால் 5,000 பேருக்கு மேல் கொரோனா பரவியுள்ளதை, பேசுகிறார்கள். ஆனால் இது திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறதா என்ற சந்தேகமே மேலோங்கி நிற்கிறது.

  Read more
 • கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?

  வழிமுறைகள்

  சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மார்ச் 22 நிலவரப்படி 171 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்குப் பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக மார்ச் 22 வரை சுமார் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

  கொரோனா என்றால் என்ன? அது எவ்வாறு பரவுகிறது என்பதை பார்ப்போம்.

  கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?

  கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

  கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

  இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்.

  கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - எளிய விளக்கம்படத்தின் காப்புரிமைEMPICS

  கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதன் அறிகுறி முதலில் காய்ச்சலாக தொடங்கும், பின் வறட்டு இருமல் ஏற்படும் அதன்பின் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.

  சராசரியாக கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

  சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

  கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - எளிய விளக்கம்

  56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை: 

  6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

  14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரம்ம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை

  80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

  வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

   

  Read more
 • மூடப்பட்டது கைதடி இலங்கை வங்கி கிளை!வங்கியில் பணியாற்றும் பெண் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

  யாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அந்த நபர் உறவினர் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டப்பட்டுள்ளது.

  மேலும் குறித்த பணியாளர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், வங்கி கிளை அலுவலகத்தில் கிருமி நீக்கிகள் இன்று விசிறப்பட்டிருக்கின்றது.

   

  Read more
 • யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை என்ன? யாழ் போதனா வைத்தியசாலையின் அறிவிப்பு

  யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் பொது மக்களைக் கேட்டுள்ளார்.

  கொரோனா தொற்று தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  “கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 21 பேர் பரிசோதனை செய்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  அதே நேரத்தில் தற்போதும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

  இவ்வாறான நிலையில் இதுவரையில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை புள்ளி விபரங்களை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டிருக்கின்றார்.

  ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் பொறுப்பை உணர்ந்து செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Read more
 • ஊரடங்குச் சட்டத்தின்போது மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  நாளாந்தம் வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்திரளான நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  இதற்கமைய, மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

  நோயாளர்களின் பதிவேடு மற்றும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டுக்களை, ஊரடங்கின்போது பயன்படுத்தக்கூடிய அனுமதிப் பத்திரங்களாகக் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

  அதேபோல், மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஔடதங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

  Read more